தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு - இருச்சக்கர வாகன விபத்து

சென்னை முகப்பேர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

two wheeler accident  accident  women dead by two wheeler accident  chennai women dead by two wheeler accident  chennai accident case  chennai accident  accident news  விபத்து செய்திகள்  விபத்து  சென்னை செய்திகள்  வாகன விபத்து  இருசக்கர வாகன விபத்து  சென்னையில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு  இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு  பெண் உயிரிழப்பு  இருச்சக்கர வாகன விபத்து  சாலை விபத்து
விபத்து

By

Published : Aug 9, 2021, 6:18 AM IST

சென்னை: முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மாரி ரமேஷ், ராஜ பாரதி தம்பதி. கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முகபேர் பப்ளிக் பள்ளியில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து கணவன் மனைவி இருவரும் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று ராஜ பாரதி (42) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அவரின் கணவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: ’போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை’

ABOUT THE AUTHOR

...view details