தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவன், மகள் இறந்த சோகம் - பெண் தற்கொலை! - A women suicide in chennai

அயனாவரத்தில் கணவன், மகள் ஆகிய இருவரும் உயிரிழந்த சோகத்தில் இருந்த பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Women Suicide dead in ayanavaram
Women Suicide dead in ayanavaram

By

Published : Apr 30, 2021, 10:52 PM IST

சென்னை அயனாவரம், சோமசுந்தரம் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் கல்பனா (36). இவருக்கு ராஜ்குமார் என்பவருடன் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் கல்பனாவின் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கணவர் ராஜ்குமாரும், கடந்த 26 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட, கல்பனா பெரும் சோகத்தில் இருந்தார். தொடர் மன அழுத்தத்தில் இருந்த கல்பனா, கணவன், மகள் ஆகியோர் இறந்துவிட்ட துக்கம் தாளாமல் இன்று (ஏப்.30) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையறிந்த கல்பனாவின் சகோதரர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவவறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயனாவரம் காவல்துறையினர் கல்பனாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details