சென்னை: சென்னை காசிமேடு கடற்கரையில், திருவொற்றியூர் பகுதியைச்சேர்ந்த சதிஷ், தேவிகா(47) தம்பதியினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில், தேவிகா(47) திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
கடலில் குதித்த பெண்ணைக் காப்பாற்றிய காவலர்கள்! - கடலில் குதித்த பெண்ணை காப்பாற்றிய காவலர்கள்
காசிமேடு பகுதியில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்மணியை, காவலர்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து காப்பாற்றினர்.
woman
அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காசிமேடு மீன்பிடித்துறைமுக காவல் நிலைய காவலர்கள் ராபின் ஜோசப், புவனேஸ்வரன் இருவரும், விரைந்து சென்று தேவிகாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கிருந்த மீனவர்களும் காவலர்களுக்கு உதவினர். பின்னர் காவலர்கள் தேவிகாவை உயிருடன் மீட்டு வந்தனர். இதையடுத்து முதலுதவி செய்து தேவிகாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:சென்னையில் போதைப்பொருள் விற்ற தான்சானியா பெண்!