சென்னை, பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பெயின்டர் கிருஷ்ணனின் மகள் பாரதி (24). இவரும் தனியார் டிரவல்ஸ் நிறுவன ஊழியர் மோகனும் காதலித்தனர். இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில் மோகனின் பெற்றோர் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
பெற்றோரின் விருப்பத்திற்காக மோகன் தனது காதலை முறித்து கொண்டார். இந்தச் சமயத்தில் ‘ஹலோ ஆப்’ மூலம் பாரதிக்கு விருதுநகர் மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த முத்துக்குமரேசன் (32) என்பவர் அறிமுகமானார்.
நாக்பூரில் ராணுவ ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சென்னை வந்திருக்கிறார். தாம்பரத்தில் பாரதியும் இவரைச் சந்தித்திருக்கிறார். இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
எல்லாம் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் முத்துக்குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது சில நாள்களுக்கு முன் பாரதிக்கு தெரியவந்தது. இது தொடர்பாக குமரேசனிடம் பாரதி கேட்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தனக்கு திருமணமான நிலையிலும், குமரேசன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி, பாரதியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு பாரதி மறுப்பு தெரிவித்ததால் பாரதியின் குடும்பத்தாரிடம் செல்போனில் பேசி திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.