சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, வெள்ளி இரவு புறப்பட்ட பொதிகை விரைவு ரயில், விருத்தாச்சலம் ரயில் நிலையத்தை கடக்க இருந்த போது, குளிர்சாதன பெட்டியில் பயணித்த ஒருவர், அதே பெட்டியில் எதிரே இருந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, பாதிக்கப்பட்ட பெண், காவலன் செயலி வாயிலாக புகார் அளித்துள்ளார்.
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - பயிற்சி காவல்துறை அதிகாரி கைது - பயிற்சி காவல்துறை அதிகாரி கைது
சென்னையில் இருந்து மதுரை சென்ற பொதிகை விரைவு ரயிலில், பாலியல் தொல்லை கொடுத்தாக காவலன் செயலி வாயிலாக பெண் கொடுத்த புகாரின் பேரில், பயிற்சி காவல்துறை அதிகாரியை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை
இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட ரயில் பெட்டிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணச்சீட்டு பரிசோதகர் உள்ளிட்டோர் விரைந்தனர். பின்னர் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பயிற்சி காவல் அதிகாரியை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க : பார் உரிமையாளரிடம் மாமூல் கேட்ட திமுக எம்எல்ஏ மீது புகார்!