மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக இந்தாண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெசன்ட் நகர் கடற்கரையில் சமூக பாதுகாப்புத் துறை சார்பில் மணல் சிற்பம், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குறிப்பாக தனியார் கல்லூரி மாணவிகளின் நாடகம், பெண் குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் வன்முறை தொடர்பான பிரச்னைகளைக் கண்முன்னே கொண்டுவந்தனர் .
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அமைச்சர் சரோஜா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் 5945 குழந்தைகள் அரசிடம் வந்துள்ளன. குழந்தைகளுக்கு மருத்துவச் சிகிச்சை செய்யப்பட்டு தத்து கொடுக்கப்படுகிறது. உள்நாட்டில் 3535 பெண் குழந்தைகள் 1500 ஆண் குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன.