மாதவரம், பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் 5வது பிரதான சாலையை சேர்ந்தவர் ரவி (52). இவர் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (47). ரவி தனது மனைவி கலைவாணிக்கு போன் செய்து எடுக்காததால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர், சந்தேகப்பட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கலைவாணி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். மேலும், வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு சில நகைகள், பணம் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, ரவி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்களது வீட்டில் வேலை பார்த்து வந்த தம்பதியினர் கலைவாணியை கொலை செய்தது தெரியவந்தது. குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்த நிலையில் தம்பதியினர் பெங்களூரில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.