தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலதிபர் கொலை வழக்கு பெண் வழக்கறிஞர் கைது! - business man murder

சென்னை: அடையாறு தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், முக்கியக் குற்றவாளியாக இருந்த பெண் வழக்கறிஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெண் வழக்கறிஞர்

By

Published : Aug 8, 2019, 1:40 PM IST

சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ். திருமணம் செய்யாமல் பங்களா வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவர் திடீரென கடந்த ஜூன் மாதம் காணாமல்போனதால், அவரது உறவினர்கள் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்துவந்தனர். சுரேஷ் பரத்வாஜின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்தபோது, காணாமல்போவதற்கு முன்பு காசிமேட்டைச் சேர்ந்த ரவுடிகளையும், பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பிரபல ரவுடிகளான குடுமி பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தபோது, தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ், வழக்கறிஞர் ப்ரீத்தா என்பவருக்கு 60 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை பரத்வாஜ் திரும்பக் கேட்டதால் அவரை கூலிப்படை வைத்து கடலுக்குள் கடத்திச் சென்று கொலை செய்து உடலை கடலில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர்.

பெண் வழக்கறிஞர் ப்ரீத்தா

இந்த வழக்கில் உடந்தையாக இருந்த கூலிப்படையைச் சேர்ந்த மேலும் 3 பேரை கைது செய்த காவல் துறை தலைமறைவாக இருந்த பெண் வழக்கறிஞர் ப்ரீத்தாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ப்ரீத்தாவை இன்று அடையாறு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details