சென்னை:பல்லாவரம் அடுத்த பாரதி நகர் மலைமகள் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி சத்தியவாணி (55). அவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். சத்தியவாணி மற்றும் அவரது கணவர் ஆகிய இரண்டு பேரும் அவரின் மருமகன் வீட்டில் நான்கு பக்கம் சுவர் கட்டப்பட்டு கூரையால் வேயப்பட்டிருந்த வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு (செப்.24) சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. அவர்களது பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மழையால் முற்றிலுமாக நனைந்து இருந்த நிலையில், இவரது வீட்டின் மீது பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மலைப்பகுதி என்பதால் காம்பவுண்ட் சுவருக்கு முறையான பில்லர்கள் இல்லாததால் பக்கத்து வீட்டின் சுற்றுச்சுவர் பாரம் தாங்காமல் இவரின் வீட்டின் மீது இடிந்து விழுந்தது.