தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 14, 2023, 9:42 AM IST

ETV Bharat / state

லேகேஷ் கனகராஜின் உதவி இயக்குனர் மீது இளம்பெண் பகீர் புகார்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரும், பிரபல பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுவதாக லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் மீது பெண் புகார்
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றுவதாக லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் மீது பெண் புகார்

சென்னை: நொளம்பூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னை வேளச்சேரியை சேர்ந்த பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் "பாடலாசிரியர் விஷ்ணு இடவன் தற்போது திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் விக்ரம் திரைப்படத்தில் வரும் போர் கண்ட சிங்கம் என்ற பாடலையும், நாயகன் மீண்டும் வரார் போன்ற பாடல்களையும் இவர் எழுதியது குறிப்பிடத்தக்கது. கத்தி படத்திலும் இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

விஷ்ணு இடவனை பல மாதங்களாக காதலித்து வந்த நிலையில், தாங்கள் இருவரும் வளசரவாக்கத்தில் உள்ள விஷ்ணு இடவன் வீட்டில் அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் அதனால் கர்ப்பம் ஆனேன்” என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் விஷ்ணு இடவனின் பெற்றோர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது விஷ்ணு இடவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் தற்போத திருமணத்திற்கு மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும், அண்மையில் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து பிரச்சனை செய்ததாகவும், இதனால் பெண் தரப்பினர் சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பாடலாசிரியர் விஷ்ணுவிடம் விசாரணை நடைபெற்றது.

இந்த புகார் தொடர்பாக நேற்று காவல் நிலையத்தில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை விஷ்ணு இடவன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இரு தரப்பிடமும் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புகார் வளசரவாக்கம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றதால் வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் பாடல் ஆசிரியர் விஷ்ணு இடவனுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Valentine's Day: ‘காதலர் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - டிஜிபி அலுவலகத்தில் புகார்

ABOUT THE AUTHOR

...view details