சென்னை கோட்டூர்புரம் மேற்கு கால்வாய் சாலை பகுதியைச் சேர்ந்தவர், டேனியல் ராஜ். இவர் பானுபிரியா (21) என்ற பெண்ணைக் காதலித்து ஒன்றரை ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
டேனியல் ராஜ் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர். இதுமட்டுமில்லாமல் அவர் வேலைக்கும் செல்வதில்லை. இந்நிலையில் டேனியல் ராஜ் குடித்துவிட்டு அடிக்கடி மனைவி பானுபிரியாவிடம் பிரச்னை செய்து வந்துள்ளார்.
நேற்று (ஆகஸ்ட் 3) மாலை டேனியல் ராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பானுபிரியாவிடம் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பானுபிரியா வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்ப பிரச்னை: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை! - சென்னை பெண் தற்கொலை
சென்னை: கோட்டூர்புரம் அருகே கணவர் குடித்துவிட்டு அடிக்கடி பிரச்னை செய்ததால் திருமணமான ஒன்றரை ஆண்டில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி தூக்கிட்டு தற்கொலை
இச்சம்பவம் அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். அதனடிப்படையில் கோட்டூர்புரம் காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து பானுபிரியாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணின் தற்கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள டேனியல் ராஜ், அவரது தாய் அந்தோணியம்மாள் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாதவிடாய் வலி: மாணவி தற்கொலை!