தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த பெண் தற்கொலை! - கரோனாவால் பெண் தற்கொலை

சென்னையில் கரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Woman commits suicide while waiting for corona result in chennai
Woman commits suicide while waiting for corona result in chennai

By

Published : May 19, 2021, 10:22 PM IST

சென்னை:சென்னை கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் வீணா (32). இவருக்குத் திருமணமாகி 14 ஆண்டுகளாகிறது. இவருக்குத் திடீரென நேற்று (மே 18) உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மாநகராட்சி மையத்தின் மூலம் கட்டபொம்மன் தெருவில் நடைபெற்ற முகாமில் கரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

கரோனா பரிசோதனை முடிவுவரும் வரையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும்படி அவருக்கு மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனடிப்படையில் வீணா வீட்டின் கீழ்தளத்தில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வந்ததார். இந்நிலையில், நேற்றிரவு கணவரிடம் பேசிவிட்டு அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்துள்ளார்.

இதனையடுத்து, காலையில் நீண்ட நேரமாகியும் வீணா அறையை விட்டு வெளியே வராததால், அவரது கணவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் காவல் துறையினர், வீணாவின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கரோனா அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'கரோனா நிதி எனக்கு தான்...'; மனைவியைத் தாக்கிய நபர் கைது!

ABOUT THE AUTHOR

...view details