சென்னை: விருகம்பாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர்கள் கார்த்திக் - கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு சொந்தமான வீட்டை அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் அபகரித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி சென்னை தலைமைச் செயலகம் அருகே, கௌசல்யா பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.