தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் சிறையில் அடைப்பு! - Woman arrested for stealing train in Chennai

சென்னை: ஓடும் ரயிலில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த இளம்பெண்ணை காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Woman arrested for stealing train in Chennai, சென்னையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த பெண் சிறையில் அடைப்பு

By

Published : Nov 8, 2019, 5:58 PM IST

சென்னையில் பெண்கள் வெயிலின் தாக்கம், மாசுக்கள் காரணமாக முகத்தில் துணிக்கட்டி கொண்டு செல்வது வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. இந்நிலையில், இதனை பயன்படுத்தி ரயில்கள், பேருந்துகளில் பல இளம் பெண்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துவந்தது. எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் ஒரே மாதிரியாக ஒன்பது திருட்டு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு இளம்பெண் முகத்தில் துணி கட்டிக்கொண்டு மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் சாதாரண பயணி போல் ஏறி கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த அதே பெண் இன்று பூங்கா ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி தேவி (24) என்பதும், இவர் இதேபோன்று பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட தேவியிடம் இருந்து சுமார் 20 சவரன் நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தொடர் திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுமி கைது!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details