தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 2, 2023, 10:29 PM IST

ETV Bharat / state

ஈபிஎஸ், ஓபிஎஸ் பெயரைச் சொல்லி ரூ.59 லட்சம் மோசடி.. கில்லாடி ராணி கைதானது எப்படி?

முன்னாள் முதலமைச்சர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் பெயரைச் சொல்லி 59 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் பெயரைச் சொல்லி 59 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது
ஈபிஎஸ், ஓபிஎஸ் பெயரைச் சொல்லி 59 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது

சென்னை:முன்னாள் முதலமைச்சர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பெயரைச் சொல்லி 59 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்தவர் திலகவேணி (வயது 53). இவர் அதிமுக கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

இவர் முன்னாள் முதலமைச்சர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருடன் புகைப்படம் எடுத்து உள்ளார். அதைத் தொடர்ந்து அந்த புகைப்படங்களை பலரிடம் காட்டிய திலகவேணி, தான் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்கு பழக்கமானவர் என்றும் தங்களுக்கு வேலை வாங்கி தருவதாகவும் பலரை நம்ப வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ரூ.50 சிறப்பு தரிசன கட்டணம் ரத்து.. இந்து சமய அறநிலையத் துறை!

இதை நம்பிய சிலர் திலகவேணியிடம் பல லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் திலகவேணி வேலை எதுவும் வாங்கி தராததால் அதிருப்தி அடைந்த அவர்கள், இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த அடையாறு போலீசார் திலகவேணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அதிமுக கூட்டங்களுக்கு சென்று அங்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து பல நபர்களிடம் மோசடி செய்ததும், தான் அதிமுக கவுன்சிலர் என நம்ப வைத்து பணம் கொடுத்த நபர்களை நேரடியாக தலைமைச் செயலகம் அழைத்துச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது உள்ளது.

இதையும் படிங்க:அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் வலது கையை இழந்ததா 1½ வயது குழந்தை? - நடவடிக்கை என்ன?

இதுவரை 15க்கும் மேற்பட்ட நபர்கள் புகார் அளித்ததன் பேரில் அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 59 லட்சம் என அடையாறு போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பலரிடம் இதே போல வேலை வாங்கி தருவதாக கூறி இவர் பணம் மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் புகார் எண்ணிக்கை அதிகரித்தால் மோசடி தொகையும் அதிகரிக்கலாம் என அடையாறு காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல வகையில் பண மோசடியில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து பணம் பறித்த நிலையில், முன்னாள் முதலமைச்சர்கள் பெயரில் பணமோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறது - முதலமைச்சர் பெருமிதம்

ABOUT THE AUTHOR

...view details