தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி - ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது - திருமண மோசடி செய்த பெண்

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறிவைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பல ஆண்களிடம் திருமண மோசடி
பல ஆண்களிடம் திருமண மோசடி

By

Published : Jul 4, 2022, 5:47 PM IST

சென்னை:ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி (65). இவரது மகன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக மருமணத்திற்காக பெண் தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் திருப்பதி புத்தூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் திருமண புரோக்கர் மூலமாக ஏழை குடும்பம் என கூறி அறிமுகமாகியுள்ளார்.

இந்திராணி குடும்பத்தார் பெண்பார்க்க ஆந்திராவுக்கு வருவதை அறிந்த 54 வயதான சுகுணா பியூட்டி பார்லர் சென்று முடியை சரி (HAIR STRAIGHTING) செய்து கொண்டு மேக்கப் போட்டு 35 வயதான இளம் தோற்றத்துடன் மாப்பிள்ளை வீட்டார் முன் தோன்றியுள்ளார். அவரது அழகில் மயங்கிய மாப்பிள்ளை வீட்டார் பெண் அழகாக இருக்கிறாள் என மாப்பிள்ளை வீட்டிற்கு பெண்ணை பிடித்து போய் உள்ளது.

பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் மாப்பிளை வீட்டாரின் செலவில் திருநின்றவூரில் திருமணம் நடந்துள்ளது. இந்திராணி மகன் மணமகளுக்கு தனது சொந்த செலவில் 25 சவரன் நகை அளித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த சில நாள்களிலேயே சரண்யா, இந்திராணி மகனிடம் மாத வருமானம் தன்னிடம் தான் கொடுக்க வேண்டும், வீட்டின் பீரோ சாவி தன்னிடம் கொடுக்க வேண்டும் என சொல்லி சண்டையிட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து தினமும் கணவரிடம் உங்கள் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதி தர வேண்டுமென சரண்யா அடம்பிடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கும் முன்பு மாமியார் இந்திராணியை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த கணவர் சொத்துகளை எழுதி வைக்க சரண்யாவிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார்.

ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் தன்னிடம் இல்லை என கூறி ஆதாரங்களை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சரண்யா தனது ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணத்தை அளித்துள்ளார். அதில் C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது. இதில் சந்தேகமடைந்த இந்திராணி மற்றும் அவரது மகன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் லதா இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மகள் இருவருக்கும் திருமணமாகி அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுகுணா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.

தொடர்ந்து வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் சுகுணா மற்றும் அவரது தாயார் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள சில திருமண புரோக்கர்கள் உதவியுடன் திருமணம் ஏமாற்று வேலையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். அப்போது, சென்னை ஆவடி அடுத்த முத்தாபுது பேட்டையைச் சேர்ந்த இந்திராணி அவரது மகனுக்கு பெண் தேடி வந்தது தெரியவந்தது. உடனடியாக தனது பெயரை சரண்யா என மாற்றிக்கொண்ட சுகுனா, தனக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து இந்திராணி மகனை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் அவர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இந்திராணியின் புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டையில் பதுங்கியிருந்த சரண்யாவை ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா உள்ளிட்ட காவல் துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில், இதேபோல் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த ரயில்வே உணவு காண்டராக்டர் சுப்ரமணியன் என்பவரை சில புரோக்கர் உதவியுடன் சந்தியா என்ற பெயரில் 11 ஆண்டுகளாக கணவன் மனைவியாக குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது தெரியவந்தது.

சுப்பிரமணியுடன் சேலம் மாவட்டத்தில் சில காலம் தங்கி வந்துள்ளார். பின்னர் கரோனா காலத்தில் தனது தாயைப் பார்க்க செல்வதாக கூறி சென்றவர் அத்துடன் சில தினங்களுக்கு முன்னர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் சுகுணா, சந்தியா, சரண்யா என பல பெயர்களை பயன்படுத்தி பலரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை கேட்டு மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் அதிர்ந்து போயினர்.

பின்னர் 11 ஆண்டுகளாக வாழ்ந்த கணவர் சுப்ரமணியன் தனது மனைவி காவல் துறையினர் கைது செய்து சிறை சிறைக்கு அனுப்பியது தெரியாது எனவும் சிறையில் இருந்து வெளியே வந்தால் அறிவுரைகள் கூறி தான் ஏற்றுக் கொள்ள இருப்பதாகவும் கூறினார். மேலும், தனக்கு வயதாகி விட்டதால் அவரைத் தவிர தனக்கு துணை யாரும் இல்லை எனவும் மிகுந்த வருத்தத்துடன் கூறினார்.

மேலும் மோசடி பெண் தனது முதல் கணவரான ரவி மீது ஆந்திரா காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை செய்தார் என புகார் அளித்து 10 லட்சம் பணம் சுருட்டியுள்ளார். இதே பாணியில் ஆவடியைச் சேர்ந்த இந்திராணி மகனான தனியார் நிறுவன மேலாளர் மீது ஆந்திராவில் வரதட்சணை கொடுமை புகார் அளித்து பணத்தை ஏமாற்ற இருந்த நிலையில் ஆவடி அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களை குறி வைத்து சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த பலே கில்லாடி பெண் ஆவடி மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உல்லாசமாக இருந்த காதலன்...கழற்றிவிட முயன்றபோது கைது!

ABOUT THE AUTHOR

...view details