தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேதா இல்லத்தை விலைக்கு வாங்க செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை திரும்பப் பெறுகிறோம் - தமிழ்நாடு அரசு - வேதா இல்லத்தை விலைக்கு வாங்க செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதாக தமிழ்க அரசு தகவல்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக தமிழ்நாடு அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வேதா இல்லம்
வேதா இல்லம்

By

Published : Feb 16, 2022, 1:33 PM IST

சென்னை :கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி உத்தரவு பிறப்பித்தது. இதற்கு ஏதுவாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்தது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட வேதா இல்லத்திற்கு இழப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு செலுத்தியுள்ளது.

வருமான வரி பாக்கியாக ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி 36.9 கோடி ரூபாயும் செலுத்தப்பட்டுள்ளது. மனுக்களை விசாரித்த நீதிபதி, அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தீபா, தீபக் மற்றும் வருமான வரித்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளான தீபக், தீபா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து, கடந்த (2021) நவம்பர் 24ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபராக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.இதனை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வு, தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

வேதா இல்லம்

இந்த நிலையில சென்னை ஆறாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேதா இல்லத்தை விலைக்கு வாங்க 68 கோடி ரூபாய் டெபாசிட் செய்த தொகையை திரும்ப பெறுவதாகவும், நிலம் கையப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வருமானவரித்துறையின் சார்பில் சில விளக்கம் தேவைப்படுவதால் வழக்கில் வரும் 18ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : எட்டு மாத ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றம் - திமுக தலைவர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details