தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிதிப்பற்றாக்குறை குறைவு - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பேச்சு

திமுக அரசு ஆட்சி அமைந்த பின் கரோனா இரண்டாவது அலை, மழை வெள்ளப் பாதிப்பு உள்ளிட்ட பேரிடர் சீற்றங்களையும் வெற்றிகரமாக கடந்து, கடந்த ஆண்டைக்காட்டிலும் நிதிப்பற்றாக்குறை, மொத்தக் கடன் சுமையை குறைத்துக் காட்டியுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

பி.டி.ஆர் பெருமிதம்
பி.டி.ஆர் பெருமிதம்

By

Published : Mar 21, 2022, 8:49 PM IST

சென்னை:கரோனாவின் இரண்டாம் அலை, மழை வெள்ளப்பாதிப்பு உள்ளிட்டப் பேரிடர் சீற்றங்களையும் வெற்றிகரமாக கடந்து, கடந்த ஆண்டைக் காட்டிலும் நிதிப்பற்றாக்குறையையும், மொத்தக் கடனையும் குறைத்துக் காட்டியது திமுக அரசு என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய பழனிவேல் தியாகராஜன், "கடந்த ஆண்டு 2021 பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டின் பொதுக்கடன் 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய், நிதிப்பற்றாக்குறை ரூ.84,686 கோடியாக இருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக கடந்து, மழை வெள்ளப் பாதிப்பு, கரோனா நிவாரணம் பத்தாயிரம் கோடி வழங்கப்பட்டு, கரோனா உபகரணங்கள் பெறப்பட்டது என அனைத்து செலவையும் மேற்கொண்டு நிதிப்பற்றாக்குறையை குறைத்துக் காட்டியுள்ளோம்.

மொத்தக்கடன் சுமை 5 லட்சத்து 63 ஆயிரம் கோடி ஆக குறைத்து 0.8 விழுக்காடு குறைத்துக் காட்டியுள்ளோம். இது சாதாரண சாதனை அல்ல" எனக் கூறி பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரம்பரை பரம்பரையாக விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர் எதிர்க்கட்சித் தலைவர் - ஆர்.பி.உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details