தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வன்னியர் இட ஒதுக்கீடு இழுபறி முடிவுக்கு வருமா? - political news in tamil

வன்னியர்களுக்கான 20 விழுக்காடு உள்இடஒதுக்கீடு தொடர்பாக பாமக நிர்வாகிகள் இன்று அதிமுக அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

will-the-vanniyar-reservation-drag-end
வன்னியர் இட ஒதுக்கீடு இழுபறி முடிவுக்கு வருமா?

By

Published : Feb 3, 2021, 8:02 PM IST

சென்னை: வன்னியர்களுக்கான 20 விழுக்காடு உள்இடஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், அதிமுக தரப்பில் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கே.பி. முனுசாமியும், பாமக சார்பில், ஜி.கே. மணி, ஏ.கே. மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில், 20 விழுக்காடு உள்ஒதுக்கீடு குறித்து மட்டுமல்லாது தொகுதிப் பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தைக்கு பின்னர், அமைச்சர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்து கூறியதாக கூறப்படுகிறது.

அதேபோல், பாமக நிர்வாகிகள் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச்சூழ்நிலையில், பாமக நிர்வாகிகள் அமைச்சர் தங்கமணியை சந்தித்து இடஒதுக்கீடு, தொகுதி பங்கீடு இழுபறி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பாமக நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். முன்னதாக, தைலாபுரத்தில் அமைச்சர்கள், பாமக நிர்வாகிகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காதது அநீதி!'

ABOUT THE AUTHOR

...view details