சென்னை:தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று அரசுப்பள்ளிகளில் தொடக்கக்கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று வெளியிட்டுவந்த பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டில் எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
விஜயதசமி நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள சூழலில், இதுவரை அறிவிப்பு வெளியிடாததால், விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் உள்ளனர்.