தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சரவைக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா?

வரும் 26ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா
அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுமா

By

Published : Sep 23, 2022, 10:41 PM IST

சென்னை:தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் 26ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

இக்கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டம் குறித்தும், அதில் முன்வைக்கப்படும் மசோதாக்கள், பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் காய்ச்சல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்குப் பருவமழையை சமாளிப்பது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கையை சட்டப்பேரவையில் வைப்பதா அல்லது நேரடியாக மக்கள் பார்வையில் வெளியிடுவதா என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

ஏற்கெனவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தமிழ்நாடு அரசிடம் உள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் குறித்து பேச வாய்ப்பு உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:சென்னை புறநகர் ரயிலில் கத்தியை வைத்து மிரட்டிய கல்லூரி மாணவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details