சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், இன்று 11 வது சுற்று நடைபெற்று வருகிறது. முன்னதாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தொடக்க விழா, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மேலும் அதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா, இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ‘செஸ் தம்பி’ வடிவத்தினாலான அழைப்பிதழ் வழங்கப்பட்டது.