தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமமுக வேட்பாளர்களின் போட்டி, அதிமுக பிரபலங்களின் வெற்றியை பாதிக்குமா? - அதிமுக vs அமமுக வேட்பாளர்கள்

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். அதேபோல் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பிரபலங்களை எதிர்த்து களத்தில் நிற்கும் வேட்பாளர்களால் அதிமுகவின் வெற்றி பாதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

will ammk contestant will affect admk victory
அதிமுக vs அமமுக வேட்பாளர்கள்

By

Published : Mar 13, 2021, 8:40 AM IST

அமமுக vs அதிமுக

அமமுக சார்பில் கோவில்பட்டியில் டிடிவி தினகரன் களம் கானும் நிலையில், அவரை எதிர்த்து அமைச்சர் கடம்பூர் சி ராஜூ களம் காண்கிறார். இதனால் அதிமுக மற்றும் அமமுகவுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பூக்கடை என். சேகர் போட்டியிடுகிறார். போடி நாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து அமமுகவில் முத்துச்சாமி போட்டியிடுகிறார்.

திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனை எதிர்த்து பி.ராமுத்தேவர் களம் கான்கிறார்.

இரட்டை இலை சின்னத்தில் 5 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள்

அதிமுக கூட்டணியில் அதிமுக சார்பில் 176 பேர் நேரடியாக களத்தில் உள்ளனர். அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் பசும்பொன் தேசிய கழகமும், பெருந்தலைவர் மக்கள் கட்சி பெரம்பூர் தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் எழும்பூர் தொகுதியிலும், புரட்சிப்பாரதம் கட்சி கீழ்வைத்தியணான்குப்பம் (கே.வி.குப்பம்) தொகுதியிலும், மூவேந்தர் முன்னேற்றக்கழகம் கும்பகோணம் தொகுதியிலும் என 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் நேருக்கு நேர் போட்டி

அதிமுகவின் நிர்வாகிகளாக இருந்து அமமுகவுக்கு சென்றவர்கள் நேரடியாக இவர்களை எதிர்த்து போட்டியிடும் தொகுதிகளில் வாக்குகள் பிரிந்தால் திமுக கூட்டணி வெற்றிப் பெறுவது எளிதாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ராசிபுரம் தொகுதியில் அதிமுக அமைச்சர் சரோஜாவை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் களத்தில் இறங்கி உள்ளார். அமமுகவில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனை எதிர்த்து இடைத்தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற எம்எல்ஏ கோவிந்தசாமி போட்டியிடுகிறார். ஆனால் இந்தத் தொகுதியில் போட்டி கடுமையாகவே இருக்கும் என தெரிகிறது.

சைதாப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் அமமுக சார்பில் போட்டியிடுகிறார். ஆனால் இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் சைதை. துரைசாமி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கட்சியின் செயல்பாட்டில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி இருந்து வருகிறார். இந்தச் சூழ்நிலையில் அதிமுகவின் அறிவிப்பு தொண்டர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அரசு கொறாடா மனோகரன் அமமுகவில் போட்டியிட உள்ள நிலையில் , அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக சார்பில் களம்கான்கிறார். மடத்துக்குளம் தொகுதியில் வெற்றிப் பெற்று முன்னாள் அமைச்சராக இருந்த சண்முகவேலு அமமுகவில் களம் இறக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் களத்தில் நிற்கிறார்.

பொள்ளாச்சி தொகுதியில் அதிமுகவில் தொடர்ந்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற பொள்ளாச்சி ஜெயராமனை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் போட்டி

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் முன்னாள் மேயர் விசாலாட்சியை அமமுக களத்தில் இறக்கி உள்ளனர். அதிமுகவில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் இவருக்கு எதிராக மாேதுகிறார்.

அமமுகவில் சாத்தூர் தாெகுதியில் அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து அதிமுகவில் ஆா்.கே.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார். சிவகாசியில் கடந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் நின்று வெற்றிப் பெற்ற ராஜேந்திர பாலாஜி இந்தத் தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையத்தில் போட்டியிடுகிறார்.

இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் சாமிக்காளை போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து லட்சுமி கணேசன் அதிமுகவில் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் இதுவரை 65 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தேர்தல் களத்தில் கமல்; கோவை தெற்குத் தொகுதியில் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details