சென்னை: சட்டப்பேரவையில் இன்றைய பொதுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செயல்திட்டம் தீட்டியதை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என அதிமுக உறுப்பினர் செந்தில்குமார் பேசினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "அதிமுக ஆட்சியில் 7 ஆண்டுகளில் ஒரு ஆண்டாவது 1 ரூபாய் வருவாயில் சேமித்ததாக காண்பிக்கட்டும். ஆதாரமற்ற முறையில் பேசக்கூடாது. தமிழ்நாட்டின் நிதி பற்றாக்குறை குறித்து வெள்ளை அறிக்கை அளித்துள்ளேன்'' என்றார்.
மேலும் பேசிய அவர், '' 2006ஆம் ஆண்டு திமுக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 5ஆயிரம் கோடி இருந்த முதலீட்டை, 2011ஆம் ஆண்டு ஆட்சி முடியும்பொழுது 13 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த 10ஆண்டுகளில் 1 விழுக்காடு கூட முதலீட்டை உயர்த்தவில்லை.