சென்னை:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம், சிப்பாய் நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்(31), டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பூங்கொடி(24), இவர்களுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை உதயகுமார் அறுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கணவன் உதயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரிக்க போலீஸ் நிலையம் வருமாறு உதயகுமாரை போலீசார் அழைத்த நிலையில் உதயகுமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உதயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உதயக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளதாகவும். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை உதயகுமார் அறுத்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த பூங்கொடி ,பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் கணவன் உதயகுமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி புகார் அளித்தது தெரியவந்துள்ளது.
இந்த புகாரின் பேரில் விசாரிக்க போலீஸ் நிலையம் வருமாறு உதயகுமாரை போலீசார் அழைத்த நிலையில் தன் மீது புகார் கொடுக்க வேண்டாம் என மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனது பேச்சை மீறி புகார் கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன், என கூறிய நிலையில் மனைவி புகார் அளித்ததால் ஆத்திரமடைந்து உதயகுமார் தற்கொலை செய்து கொண்டிருப்பது. முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு! விபத்து நேரிட்டது எப்படி?