கரோனாவால் இறந்த சென்னை மருத்துவர் சைமனின் உடலைப் புதைக்க விடாமல் செய்த மனிதாபிமானமற்ற செயல் இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், ஒருவேளை அவர்கள் இறந்தால் நல்ல முறையில் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர். அதேபோல உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
இச்சூழலில் சைமனின் மனைவி ஆனந்தி தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முதலமைச்சரிடம் கண்ணீரும் கம்பளையுமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் உருக்கமாகப் பேசிய வீடியோவில், “எனது கணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, வென்ட்டிலேட்டரில் சிகிச்சை பெறுவதற்கு முன் என்னுடனும் எங்களது குழந்தைகளுடனும் வீடியோ காலில் பேசினார்.
அப்போது அவர், ”நான் திரும்பி வருவேனா என்று தெரியவில்லை. நான் வரவில்லை என்றால் நமது முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறையில் எனது உடலை அடக்கம் செய்துவிடுங்கள்” என்று கடைசி ஆசையை எங்களிடம் தெரிவித்தார்.