சென்னை: செங்குன்றம் அடுத்த காரனோடை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம் குமார் - பரிமளா தம்பதி. இவர்கள் நேற்று (டிசம்பர் 12) இருசக்கர வாகனத்தில் அம்பேத்கர் கல்லூரி சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த குப்பை லாரி மோதியது.
இதில் பிரேம் குமார், பரிமளா இருவரும் நிலைகுலைந்து தடுமாறி சாலையில் விழுந்தனர். பிரமிளாவின் மீது லாரியின் முன்பக்க சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேம் குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
கணவன் கண்முன்னே மனைவி உயிரிழப்பு தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பிரேம் குமாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரமிளாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குப்பை லாரி ஓட்டுநரான உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மங்களரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:புதிதாக கட்டப்படும் சிவாலயத்தில் ஒருவர் கொலை - காவல்துறை விசாரணை