சென்னை குரோம்பேட்டை அடுத்த அர்க்கீஸ்வரர் தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (25). இவரது மனைவி கௌசல்யா, தனியார் மருத்துவமனையில் செவிலியாகப் பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சரண்ராஜ், கௌசல்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று (நவ. 02) பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய கௌசல்யாவிடம் சரண்ராஜ் தகராறு செய்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனால், மன உளைச்சலிருந்த கௌசல்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பின்பு வீடு திரும்பிய சரண்ராஜ் வெகு நேரமாக கதவைத் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தார். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது கௌசல்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.