சென்னை: பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் கட்டுமான கான்ட்ராக்டர் தயாளன் (48). இவருடைய மனைவி கார்த்திகா(42). இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் கடந்த 17 வருடங்களாக குழந்தையில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு கார்த்திகாவின் சகோதரர் கதிரவன், கார்த்திகாவிற்கு தொலைபேசி மூலம் தொடர்ப்பு கொண்டுள்ளார். அப்போது அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த அவர் நேரடியாக வீட்டிற்க்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது, கதவு பூட்டியிருந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் கார்த்திகா மின்விசிரியில் தூக்கியில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.