சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிதா (34). இவருடைய கணவர் மனோஜ்குமார் (39). இவர்களுக்கு 10 வயது மகனும், 6 வயது மகளுக்கு உள்ளனர்.
இதனிடையே கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி அம்பத்தூரில் பணியை முடித்து மதுரவாயல் புறவழிசாலையில் வீடு திரும்பிய மனோஜ் குமார், அவரது பின்னால் அதிவேகமாக கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவன் இறந்த சோகம் தாங்காமல், நிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்றிரவு (ஏப்.25) நிதா தனது இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷமருந்தியுள்ளார்.
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை! - கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை
சென்னை: தாம்பரம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தனது மகன், மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைக் கண்ட அவரது உறவினர்கள். அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிக்கிச்சைப் பெற்றுவந்த நிதா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இரு குழந்தைகளும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்த காவல் துறையினர், நிதாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.