தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றியை தமிழ்நாட்டில் கொண்டாட காரணம் என்ன?

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தமிழ்நாட்டு மக்கள் அதிகம் கொண்டாட காரணம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தமிழ்நாட்டில் அதிகமாக கொண்டாட காரணம் என்ன?
கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் வெற்றி தமிழ்நாட்டில் அதிகமாக கொண்டாட காரணம் என்ன?

By

Published : May 14, 2023, 2:26 PM IST

சென்னை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களம் கண்டனர். 224 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளிலும், பாஜக 66, ஜேடிஎஸ் 19 மற்றும் மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி அடைந்துள்ளனர்.

135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் விரைவில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இது கடந்த 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமான இடங்களில், அதிகமான வாக்குகள் பெற்று காங்கிரஸ் சாதனை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த காங்கிரஸ் வெற்றி கொண்டாட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டில் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு பல காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென்னிந்தியா முழுவதும் பாஜக எதிர்ப்பு என்பது சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் தலைமையின் கீழான மாநில கட்சிகளின் ஆட்சியே இருந்து வருகிறது.

தற்போது காங்கிரஸ் கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ளதால், தென்னிந்திய பகுதிகளில் பாஜக எந்த மாநிலத்திலும் ஆளுங்கட்சியாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ‘திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத் தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் மட்டுமின்றி, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர் காங்கிரஸுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிராகவும் பதிவு செய்து வருவதை காண முடிகிறது.

மேலும், நேற்று (மே 13) ட்விட்டரில் #southrejectbjp என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்தது. அது மட்டும் இன்றி தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கர்நாடகா தேர்தலுக்கு முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பாஜகவை ஆதரித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், காங்கிரஸ் கட்சியை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கர்நாடக தேர்தல் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இது தொடர்பாக பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ஜனநாயத்தின் எதிரிகள் ஜனநாயகத்தாலே வீழ்த்தப்படும் பொழுது, அது கட்சிகளை கடந்து தேசமே கொண்டாடும் வெற்றியாக மாறுகிறது. தேசத்திற்கு கொண்டாட்டத்தை பரிசளித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்துகள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Karnataka Politics: தோல்வியடைந்தாலும் சிதராத பாஜகவின் வாக்கு வங்கி.. காங்கிரஸுக்கு காத்திருக்கும் அடுத்த சவால்!

ABOUT THE AUTHOR

...view details