தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'முருகன் அவமதிப்பு; அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்ட ஸ்டாலின்' - அமைச்சர் வேலுமணி விமர்சனம் - தமிழர் கடவுள் முருகரை அருவருப்பாக நிந்தித்தவர்

சென்னை: தமிழர் கடவுள் முருகரை அவமதித்தவர் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன் என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

why Stalin keeps silent in kantha sasti kavasam issue minister velumani questioned
why Stalin keeps silent in kantha sasti kavasam issue minister velumani questioned

By

Published : Jul 18, 2020, 4:39 PM IST

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாக இதுவரை இருவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் அலுவலகங்களிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பதிவில் இச்சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்துள்ளார். அதில், “தேர்தல் வரும்போது மட்டும்தான் ஒருவருக்கு அனைத்துத் தரப்பு மக்களும், அவர்களது உணர்வுகளும் திடீர் நினைவிற்கு வரும் போலும். கோயில் கோயிலாகப் படியேறும் அரசியல் நேர்த்திக்கடன் நாடகங்களும் அரங்கேறும்.

அரசின் சார்பில், தமிழர் கடவுள் முருகரை அறுவறுப்பாக நிந்தித்தவர் மீது கைது உள்பட கடும் நடவடிக்கைகள் தொடரும் நிலையில், அனைத்திலும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் திமுக தலைவர் ஸ்டாலின் உலகெங்கும் வாழும் தமிழர் பலர் போற்றி வணங்கும் முருகர் அவமதிப்புக்கு தன் அறிக்கைக்கு முழு ஊரடங்கு போட்டு அமைதி காக்கும் காரணமென்ன?

இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், அவரது கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் தொடர்புள்ளதாகச் சந்தேகங்கள் எழுப்பப்படுவதாலா? அல்லது மதச்சார்பின்மை என்கிற பெயரில் பெரும்பாலான ஒரு சாராருக்கு எதிராக மட்டும் அவரும், அவருடைய கட்சியும் செயல்படுவதாலா?

” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details