சென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது,'இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இக்கூட்டம் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரலாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்து அதன் பின்னர் யார் நல்லவரோ அவரை பிரதமர் தேர்வு குறித்து முடிவு எடுக்கலாம் என்றார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்கக் கூடாது? என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏன் இருக்கக் கூடாது? - ஃபரூக் அப்துல்லா தடாலடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏன் இருக்கக் கூடாது? என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏன் இருக்க கூடாது?- பரூக் அப்துல்லா