தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கமல், கி.வீரமணி மீது நடவடிக்கை கிடையாதா..?' - ராம. கோபாலன் கேள்வி - தேர்தல் ஆணையம்

சென்னை: "இந்துக்கள் மீது தவறாக பேசிய திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, கமல்ஹாசன் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்காமல் ஏன் பாரபட்சம் காட்டுகிறது" என்று, இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல், கி. வீரமணி

By

Published : May 16, 2019, 5:51 PM IST

Updated : May 16, 2019, 7:28 PM IST


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்துகளின் தெய்வமான கிருஷ்ணரை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தரக்குறைவாக பேசினார். இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் என்று நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார். கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இவர்கள் மீது ஏன் தேர்தல் ஆணையம், இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.


மத விரோதத்தைத் தூண்ட, மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்த தேர்தல் நடத்தை விதி அனுமதிக்கிறதா..? தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின்பு சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அலுவலரே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம். அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. அப்படியிருக்கையில் ஏன் பாரபட்சம் காட்டுகிறது" என்று, கேள்வி எழுப்பியுள்ளார்.

Last Updated : May 16, 2019, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details