சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், சிரிவெல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ஆகியோர் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது என்பது குறித்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தனர்.
அப்போது பேசிய சஞ்சய் தத், "இந்திய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய நாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரானது. ஆர்எஸ்எஸ் இந்து ராஷ்டிரிய கொள்கையின் அடிப்படையில் இதனைச் செய்கின்றனர்.
இஸ்லாமிய மக்களின் மீது இந்தச் சட்ட மசோதா பாகுபாடு காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முன்பு இது தோல்வி அடையும். மோடி அரசின் தோல்வியிலிருந்து மக்களை திசை திருப்ப இதுபோன்று செய்துவருகின்றனர்" எனத் தெரிவித்தார்.