மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “தாய் மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு” என்கிற தலைப்பில் தென் மாநிலங்களின் மாநாடு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகித்த இந்த மாநாட்டில், கேரள மாநில இடது ஜனநாயக முன்னணிண்ணின் ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன், சிபிஎம் தெலங்கானா மாநிலச் செயலாளர் வீரபத்தரம், கர்நாடக மாநிலச் செயலாளர் பசவராஜ், மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே. பாலகிருஷ்ணன், "மத்தியில் அமைந்திருக்கும் பாஜக ஆட்சி ஒரு பக்கம் பொருளாதாரத்தை நாசமாக்கி கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து இடதுசாரிகள் மார்க்சிஸ்ட் கட்சி தான் போராடுகிறது. பாஜக இந்தி திணிப்பு, சமஸ்கிருத மையம் அமைத்தலைக் கையிலெடுத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாய் மொழி பாதுகாப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதை கையிலெடுக்கிறது” என்றார்.