கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எழிலரசன், "அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா லேப்டாக் வழங்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன" என்று கூறினார்.
லேப்டாப் வழங்குவதில் தாமதம் ஏன்? - எடப்பாடி பழனிசாமி விளக்கம் - Explain
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் விளக்கமளித்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "ஒப்பந்தம் எடுத்திருந்த இரு நிறுவனங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இரண்டு ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பழைய மாணவர்களுக்கும் வழங்குவோம். எதிர்காலத்தில் இதுபோன்ற கால தாமதம் ஏற்படாது" என்றும் தெரிவித்தார்.
மீண்டும் இதே பிரச்னையை எழிலரசன் கிளப்ப எழுந்ததும், குறுக்கிட்ட முதலமைச்சர் பழனிசாமி, "காலையிலேயே அமைச்சர் வேலுமணி தெளிவாக தெரிவித்துவிட்டார். வழக்கு காரணமாகத்தான் காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டாமா சொல்லுங்கள்" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.