தமிழ்நாடு

tamil nadu

சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள், பெண் வேட்பாளர்களை களத்தில் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை. இதற்கான காரணம் குறித்து பார்க்கலாம்.

By

Published : May 5, 2021, 10:10 PM IST

Published : May 5, 2021, 10:10 PM IST

பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை
பெண் வேட்பாளர்கள் ஏன் அதிகளவில் முன்னிறுத்துவதில்லை

தமிழ்நாட்டில் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை, இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முன்னேறி உள்ளனர். ஆனால் சட்டப்பேவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் அவர்களது எண்ணிக்கை குறைவாக உள்ளது.

திராவிட இயக்கத்தின் முதல் ஆட்சி 1967இல் அண்ணா தலைமையில் அமைந்தது. அப்போது 3 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர். 1991ஆம் ஆண்டு 32 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர். குறிப்பாக அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தார். அதனைத் தொடர்ந்து இரட்டை இலக்கத்தில் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர்.

2016ஆம் ஆண்டு 21 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள், 2021ஆம் ஆண்டு 12 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் என தொடர்ந்து 5 விழுக்காடு மட்டுமே சட்டப்பேரவையில் அங்கம் வகித்தனர்.

1967ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில்தான் அதிகபட்சமாக 33 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தனர்.

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் 234 தொகுதிகளிலும் 5 விழுக்காடு பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு 21 பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வாகினர். 2011ஆம் ஆண்டு 323 பெண் வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டனர். அதில் வெறும் 21 பெண் வேட்பாளர்கள் தேர்வாகினர்.

அதிலும் தமிழ்நாட்டில் உள்ள 46 தனித்தொகுதிகளில் இருந்து வெறும் ஐந்து பெண் வேட்பாளர்கள் மட்டும் தான் தேர்வாகினர்.

இது குறித்து சமூக ஆர்வலர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் சிவகாமி கூறுகையில், "பெரும்பாலான அரசியல் கட்சிகள் பொருளாதார ரீதியில் உள்ளவர்களை பார்த்து வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கிறது. அரசியல் கட்சிகள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் அக்கறை காட்டுவதில்லை" என்றார்.

தமிழ்நாட்டில் சுமார் 200 தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இருப்பினும் பெண் வேட்பாளர்கள் சட்டப்பேரவைக்கு குறைவான அளவில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இது குறித்து பெண் ஒருவர் கூறுகையில், "அனைத்து அரசியல் கட்சிகளும் பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தினருக்கே வாய்ப்புகளை வழங்குகிறது. பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதிகளில்கூட பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை.

இதற்கு முதன்மையான காரணம் பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்தாலும், அவர்கள் சாதி வாரியாக பிரிந்து இருக்கிறார்கள். சாதி ஒழிந்தால் தான் பெண் விடுதலையும் அரசியல் அதிகாரமும் பெண்களுக்கு சாத்தியப்படும்" என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் (SC, ST) தொகுதிகளில் மொத்தம் 46 பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்ற சட்ட வரையறை உள்ளது.

அதில் இந்த ஆண்டு (2021) திமுக 3 இடங்களிலும் அதிமுக இரண்டு இடங்களிலும் என ஐந்து வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை:

  • 1967 - 3
  • 1971 - 0
  • 1977 - 2
  • 1980 - 5
  • 1984 - 8
  • 1989 - 9
  • 1991 - 32
  • 1996 - 11
  • 2001 - 24
  • 2006 - 22
  • 2011 - 17
  • 2016 - 21
  • 2021 - 12

இதையும் படிங்க: மக்களுக்கு பக்கபலமாக இருங்கள்: தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details