சென்னை தி நகர் பகுதியில் உள்ள சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு தானியங்கி பாஸ் புத்தகம் பதிவு இயந்திரத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து பாஸ் புத்தகத்தை பதிவு செய்தார்.
பின்பு சிறு வணிக கடன், சுய உதவிக் குழு கடன், பணிபுரியும் மகளிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், புதிய கடன், நகைக் கடன், சிறு குறு மத்திய தொழில் கடன், என 2270 பயனாளிகளுக்கு சுமார் 10 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான கடன்களை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூட்டுறவு தேர்தலில் யார் தவறு செய்தாலும் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை கூட்டுறவுத் துறை சார்பாக சுமார் 7 கோடியே 40 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 3 லட்சத்து 66 ஆயிரத்து 939 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.