தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மாற்றுத்திறனாளியுடன் செல்பி எடுத்த பிரதமர்.. தேசிய கவனத்தை ஈர்த்த நபர் யார்? - pm Narendra modi

சென்னையில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாற்றுத்திறனாளி ஒருவருடன் எடுத்துக்கொண்ட செல்பி தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது. யார் அந்த ஈரோடு மணிகண்டன்?

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 9, 2023, 8:37 AM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். அதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சனிக்கிழமை பிற்பகலில் சென்னை வந்த அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு விமானப்படைத் தளத்திற்கு சென்ற பிரதமர் அங்கிருந்து சாலை மார்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார். முன்னதாக வழிநெடுகிலும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் வசதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி அதில் பயணம் செய்யவிருந்த பள்ளி மாணவர்கள், பயணிகளிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் நடைமேடையில் அமைக்கப்பட்டிருந்த மேடையின் மீது ஏறி நின்று பச்சைக்கொடி காட்டி கோவைக்கு வந்தே பாரத் ரயிலை வழியனுப்பி வைத்தார்.

அதன் பிறகு காமராஜர் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் கலந்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து சென்னை பல்லாவரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி தாம்பரம் - செங்கோட்டை புதிய ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மைசூருக்கு சென்ற பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, ஏ.வ.வேலு உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருடன் பிரதமர் மோடி செல்பி எடுத்துக்கொண்டார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், "இது ஒரு ஸ்பெஷல் செல்பி, சென்னையில் நான் திரு.மணிகண்டன் என்பவரை சந்தித்தேன். அவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பாஜக தொண்டர். மாற்றுத்திறனாளியான அவர் சொந்தமாக கடை நடத்தி அதன் மூலம் வரும் வருமானத்தில் சிறு பகுதியை பாஜகவின் வளர்ச்சிக்கு தருகிறார் என்ற செய்தி பெரும் ஊக்கத்தை அளித்தது. மணிகண்டனை போன்ற தொண்டர்கள் பாஜகவில் இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன். மணிகண்டனின் வாழ்க்கைப் பயணம், கட்சி மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு நம்மை உற்சாகப்படுத்துகிறது. அவருக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். பிரதமரின் இந்த பதிவை தொடர்ந்து ஈரொடு மணிகண்டன் தேசிய அளவில் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'வந்தே பாரத்' ரயில் கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உதவும் - வானதி சீனிவாசன் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details