தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜூலை 30) தலைமைச் செயலகத்தில், ஜெனீவா-உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.