தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலர் கலரா பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் யூஸ் பண்றீங்களா? விதவிதமான நோய்கள் காத்துக்கிட்டு இருக்கு.! - மூங்கில் வட்டர் பாட்டில்கள்

Which type of water bottles are good for health: நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்கள் ஆரோக்கியத்தில் எந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 5:13 PM IST

Updated : Oct 19, 2023, 5:49 PM IST

சென்னை:வாட்டர் பாட்டில்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செய்யும் ஊழியர்கள் வரை அனைவரது கையிலும் வாட்டர் பாட்டில்கள் இருக்கும். அந்த வாட்டர் பாட்டில்கள் உங்களுக்கு உயிர் ஆதாரமாக விளங்கும் தண்ணீரைச் சேமித்து வைக்கப் பயன்படுத்துகிறீர்கள்.

ஆனால் அந்த வாட்டர் பாட்டில்களே உங்கள் உயிருக்கு உலை வைத்தால் என்ன செய்வீர்கள். ஆம் உங்களை அச்சுறுத்துவதற்காக அல்ல இந்த பதிவு, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் கண்களைக் கவரும் நிறத்திலும், அழகிலும், விலை குறைவாகவும் கிடைக்கலாம். ஆனால் அதில் தண்ணீரை எடுத்து வைத்து குடிக்கும்போதும், சூடான தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டில் மூலம் பருகும்போதும் நீங்கள் புற்று நோய் அபாயத்தைத் தேடிச் செல்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் உள்ள ஆபத்து:உணவுகளுக்குக் காலாவதி தேதி இருப்பது போல இந்த பிளாஸ்டிக் பட்டில்களுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அந்த தேதிக்குப் பின் நேரடியாகச் சூரிய ஒளியில் படக்குடிய இந்த பாட்டில்களில் உள்ள BPA எனும் ரசாயனம் தண்ணீரில் கலக்கும். அது மட்டும் அல்ல.. பிளாஸ்டிக்கில் உள்ள பித்தலேட்ஸ் எனும் வேதிப்பொருள் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுவதோடு விந்தணுக்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக் பாட்டில்களால் வரும் நோய்கள்:

  • இதயபாதிப்பு
  • புற்றுநோய்
  • நீரிழிவு
  • உடல் பருமன்
  • கருவுறுதல் பிரச்னை
  • குடல் பிரச்னைகள்
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு
  • ஹார்மோன் சீர்குலைவு
  • மாதவிடாய் பிரச்னை

என பல நேய்களிலும் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Breathing exercise benefits in tamil: மூச்சு பயிற்சியில இவ்வளவு நன்மைகளா.? தெரிஞ்சுக்கோங்க.!

என்ன வகை பாட்டில்கள் பயன்படுத்தலாம்:பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் வேறு பல பாட்டில்கள் இருக்கின்றன. அதில் மிக குறிப்பிட்ட இடத்தில் இருப்பவைகள் மற்றும் அதன் நலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

1. கண்ணாடி பாட்டில்: தண்ணீர் பாட்டில்களுக்கான பொருளின் ஆரோக்கியமான தேர்வாக கண்ணாடி கருதப்படுகிறது. இது தண்ணீரில் எந்த ஒரு வித்தியாசமான சுவையையோ வாசனையையோ ஏற்படுத்தாது. இது முடிவில்லாமல் மறுசுழற்சி செய்யப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு சிறந்ததாக உள்ளது. ஆனால் இதை பராமரிப்பதும், பாதுகாப்பதும் சற்று கடினம் என்பதால் பலர் இதை தவிர்க்கின்றனர்.

2. அலுமினியம் வாட்டர் பாட்டில்: அலுமினியம் வாட்டர் பாட்டில் கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலைவிட குறைந்த எடையுள்ளதால் இதனை எளிதாக எடுத்து செல்லலாம். இவை தண்ணீரை நீண்ட நேரம் குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

3. செம்பு வாட்டர் பாட்டில்கள்: செம்பு வாட்டர் பாட்டில்கள் நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சரியான அளவில் சமநிலையுடன் வைத்திருக்க உதவும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருக்கும். மேலும் இயல்பாகவே இரத்தை சுத்திகரிக்கும். இதனால் இரத்தப்புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல் நலப்பிரச்னைகளை இது தடுக்கும்.

4. துருப்பிடிக்காத ஸ்டீல் பாட்டில்கள் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்):இவை தண்ணீருக்கு எந்த சுவையையும் சேர்க்காது. இவை மறுசுழற்சி செய்யப்படக்கூடியவை. இவை உங்கள் தண்ணீரில் உள்ள வெப்பநிலையை அதன் தன்மை மாராமல் பராமரிக்கும்.

5. மூங்கில் வட்டர் பாட்டில்கள்: உயர்தர மூங்கில் வகைகளில் இருந்து மூங்கில் வாட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகிறது. இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. மேலும் நீரின் ஊட்ட சத்துகளை அப்படியே வைத்திருக்கும். இவை விலை சற்று அதிகமாக இருந்தாலும் நீண்ட காலம் பயன்படுத்த முடியும்.

6. சுரைக்காய் குடுவை:இது பண்டை காலங்களில் பழங்குடி மக்கள் காடுகளில் இருந்து கிடைக்கும் சுரைக்காயை வைத்து குடுவை செய்து அதில் தண்ணீரை சேமித்து எடுத்துச் செல்வார்கள். ஆனால், இந்த குடுவைகள் தற்போது ஆன்லைன் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. இது அழகாகவும், ஆரோக்கியத்திற்கு நலன் தரும் வகையிலும் இருக்கின்றன.

பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்கி பல ஆயிரம் ரூபாய் செலவு வைக்கும் நோய்களை வரவழைப்பதைவிட, இதுபோன்ற ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வாட்டர் பாட்டில்களுக்கு குறைந்தபட்ட பணத்தை செலவு செய்வதில் தவறு இல்லை. மேலும், சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளுக்கு ஆதரவாக பிளாஸ்டிக் பயண்பாட்டை குறைக்க பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டலும் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இவற்றை குறைக்க தனிமனித மாற்றமே மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க: வாஷிங் மெஷின இப்படித்தான் யூஸ் பண்றீங்களா? தப்பாச்சே.. இனிமே இப்படி ட்ரை பன்னுங்க.!

Last Updated : Oct 19, 2023, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details