தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.1.80 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளைத் திருடி விற்க முயற்சி; நாடகமாடி பிடித்த போலீசார் - பழங்கால சிலைகள்

மானாமதுரையில் மூன்று பழங்கால உலோக சிலைகளை 1 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விற்க முயற்சி செய்த இரு நபர்களை, சிலைகளை வாங்க வந்தவர்கள் போல நடித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1.80 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகள் திருடி விற்க முயற்சி; சிலை வாங்க வந்ததுபோல் நாடகமாடி பிடித்த போலீசார்
1.80 கோடி மதிப்பிலான பழங்கால சிலைகள் திருடி விற்க முயற்சி; சிலை வாங்க வந்ததுபோல் நாடகமாடி பிடித்த போலீசார்

By

Published : Dec 13, 2022, 3:57 PM IST

சென்னை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர், வீரபத்திரன். இவர் பழமையான இரண்டு ஸ்ரீதேவி சிலை, ஒரு கருப்பசாமி உலோக சிலை என மொத்தம் 3 சிலைகளை ஒவ்வொன்றும் 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக வாடிக்கையாளர்களைத் தேடி வருவது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சிலைகளை வாங்குபவர்கள் போல நாடகமாடி வீரபத்திரன் இல்லத்திற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு தனி அறையில் இந்த மூன்று சிலைகளை பதுக்கி வைத்திருந்த வீரபத்திரனை கையும் களவுமாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பிடித்தனர்.

பின்னர் சிலைகளுக்கு உரிய ஆவணங்களைக் கேட்டபோது, வீரபத்திரன் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததினால் உடனடியாக அவரைக் கைது செய்து அவரிடம் இருந்த மூன்று சிலைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மூன்று பழங்கால சிலைகளையும் போஸ் என்பவர் வீரபத்திரனிடம் கொடுத்து விற்பனை செய்து கொடுக்குமாறு தெரிவித்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை, விற்பனை செய்ய கொடுத்த ஆட்டிறைச்சி கடையில் பணிபுரியும் போஸ் என்பவரை மதுரையில் வைத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்த சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது, சிலைக் கடத்தலில் வேறு யாருக்குத் தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் இந்தச் சிலை எந்த கோவிலுக்குச் சொந்தமானது என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓட்டிப் பார்ப்பதாக கூறி ரூ.14 லட்சம் பைக்கை ஆட்டைய போட்ட இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details