கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'அமித்ஷா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் அளித்த பேட்டி குறித்து பேசினார். அப்போது இதற்கு முன்பு தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக எனவும், மூப்பனார் பிரதமர் ஆவதை திமுக ஆதரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
பட்டியல் இனத்தவரை திமுக துணை முதலமைச்சராகுமா?:மேட்டூரில் குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை திறக்க காரணம் மோடி தான் என்றார். வேளாண் பட்ஜெட்டை முதன்முதலில் கொண்டு வந்ததும் பாஜகதான். எல்.முருகன், தமிழிசை ஆகியோரை பாஜக பிரதமராக்கலாம் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கின்றார். சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், பட்டியல் இனத்தை சேர்ந்த எல்.முருகனை பாஜக மத்திய அமைச்சராக்கியது. மேலும் பட்டியல் இனத்தவரை தமிழ்நாடு துணை முதல்வராக்க வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது என்றார்.
தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் இல்லாதது உண்மையே:9 ஆண்டு காலமாக தமிழ்நாட்டிற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என சொல்லி வரும் நிலையில், இவ்வாறு தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் இல்லை என்று முதலமைச்சரும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படாதது உண்மைதான் எனவும், சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டீர்கள் எனவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்தார்.