தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2022, 1:26 PM IST

ETV Bharat / state

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?
அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை எப்போது?

சென்னை:கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள 2,381 அரசு நடுநிலைப் பள்ளிகளின் அருகில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை நடப்பு கல்வியாண்டு (2022 - 2023) முதல் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அங்கு மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆங்கில வழிக்கல்வி அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

இதற்கிடையில், நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் எல்கேஜி, யூகேஜி மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. காலதாமதமான அறிவிப்புகள், மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.

எனவே அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என காத்திருந்த பெற்றோர், தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள மழலையர் வகுப்பிற்கு, சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிகல்வித்துறை அறிவித்தது.

ஆனால் அதற்கான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை. எனவே, ஆகஸ்ட் மாதம் முதல் அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஆட்டோ கவிழ்ந்து விபத்து: எல்கேஜி மாணவன் உயிரிழப்பு - நான்கு குழந்தைகள் காயம்

ABOUT THE AUTHOR

...view details