கரோனா பாதிப்பு காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், பொறியியல் கலந்தாய்வினை நடத்தும் தேதி, வகுப்புகளைத் தொடங்குவது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியை மாற்றி, அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் புதிய தேதியை அறிவித்துள்ளது. அதன்படி முதற்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட் 15ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவும், 2ஆம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாகவும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் தேதிகளையும் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் அறிவித்துள்ளது. இதில், ஆகஸ்ட் 1ஆம் தேதி 2ஆம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வகுப்புகளும், செப்டம்பர் 1ஆம் தேதி முதலாமாண்டு வகுப்புகளையும் தொடங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.