தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று கரோனா ஆய்வுக் கூட்டங்களை நடத்திவருகிறார். அந்தவகையில், இன்று (செப். 09) விழுப்புரம் வந்திருந்த அவர், ரூ.955 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தல் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசின் உயர் அலுவலர்கள் உடன் கரோனா குறித்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று ஆலோசனை நடத்தினார்.