தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன பிரச்சனை? - அண்ணாமலை - பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள்

பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன பிரச்சனை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்ணாமலை பேட்டி
அண்ணாமலை பேட்டி

By

Published : Nov 1, 2022, 10:52 PM IST

சென்னை: திமுக மாநில பேச்சாளர் சைதை சாதிக், சமீபத்தில் பா.ஜ.,வில் இருக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகைகள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்ததாக கூறி பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாமலை பேட்டி

விடுதலைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "திமுக பேச்சாளர், பாஜகவின் நான்கு பெண் நிர்வாகிகளை தரைக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார். பாஜகவின் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்ததும் திமுக பேச்சாளர் மீது பெயரளவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடியாத அரசு பெண்களை இழிவாக பேசக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு என்ன பிரச்சனை?. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளை சர்வாதிகாரமாக மண்டபத்திற்குள் அடைத்து வைத்துள்ளனர். இது தமிழகத்திற்கு புதிதானது.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாஜகவின் பெண் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்தாலும் அதற்கும் தயார் நிலையில் அவர்கள் உள்ளனர். இதே போன்று மும்பையில் பெண்களை அவதூறாக பேசியவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெண் நிர்வாகிகளை அவதூறாக பேசியவரை கைது செய்யாதது ஏன்?. இதன் மூலம் இந்த அரசின் இயலாமையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக எதற்காக பயப்படுகிறது?. அவதூறாக பேசிய பேச்சாளர் ஒரு சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் திமுக பயப்படுகிறதா?. தவறு யாரு செய்திருந்தாலும், எந்த கட்சிக்காரர்கள் செய்திருந்தாலும் கைது செய்ய வேண்டும். திமுகவினர் செய்யும் குற்றங்களை முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆபத்தில் முடியும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்" என கூறினார்.

இதையும் படிங்க: சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூருக்கு 10 ஆண்டுகள் சிறை

ABOUT THE AUTHOR

...view details