சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினத்தை ஒட்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரசார் மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செல்வகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, "ராஜீவ்காந்திக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் உறவு அவர் வந்து இங்கு இறந்தது தான். சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர், தற்போது பேசியது அறியாமை பதற்றமும் இருக்கிறது. யார் தியாகம் செய்தது, யார் மற்றவரிடம் கையேந்தி நிற்பது என்பது மக்களுக்கு தெரியும்.
ஒரு பச்சை மிளகாய், ஒரு கால் டம்ளர் பால் கூட சீமான் ஈழத்தமிழர்களுக்கு கொடுத்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு உரிமைகளை பெற்று பெற்றுத் தந்தவர் ராஜீவ் காந்தி. சீமானுக்கும், பிரபாகரனுக்கும் தொடர்பு கிடையாது, ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லை என்பதை, நான் சொல்லவில்லை அவருடன் நெருங்கிப் பழகிய பல்வேறு நபர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுகவுடன் கூட்டணி விவகாரத்து தலைமைதான் எதுவாக இருந்தாலும் முடிவு எடுக்கும் - அழகிரி தமிழகத்துக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்று சீமான் கேட்கிறார்? அதற்கு பதில் நீங்கள் இவ்வளவு பேசுவதே எங்களால் தான். கொச்சையான, பச்சையான பேச்சால் விளம்பரம் தேடிக் கொள்பவர் தான் சீமான். பேரறிவாளன் விடுதலை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றோ, அப்பாவி என்றோ அவரை விடுதலை செய்யவில்லை சட்டத்தில் இருக்கும் நுணுக்கதால் அவரை விடுதலை செய்துள்ளனர். இது யாரு யாரை வேணாலும் கொலை செய்யலாம் என்ற நிலைக்கு தள்ளப்படும். சீமான் துடுக்குத்தனமான பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்களும் பேசுவோம், என ஆவேசமாக கே.எஸ்.அழகிரி பேசினார்.
இதையும் படிங்க :ராஜிவ் காந்தி கொலை வழக்கு கடந்து வந்த பாதை...!