தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் திடீரென தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானம் - காரணம் என்ன? - France flight at Meenambakkam airpor

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரான்ஸ் நாட்டின் ‘ஆர்மி டிஎல்ஏர்’ விமானப்படை விமானம் தரையிறங்கியது.

சென்னையில் திடீரென தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானம்- காரணம் என்ன?
சென்னையில் திடீரென தரையிறங்கிய பிரான்ஸ் விமானப்படை விமானம்- காரணம் என்ன?

By

Published : Sep 18, 2022, 7:40 PM IST

சென்னை:பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானம் ‘ஆர்மி டிஎல்ஏர்’. இது ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ400எம் அட்லஸ் என்ற வகையைச் சேர்ந்தது. இந்த விமானம் ராணுவத்திற்காக வடிவமைக்கப்பட்டது

மணிக்கு 880 கி.மீ. வேகம் செல்லக்கூடிய இந்தப்போா் விமானம் வானிலே பறந்தபடி மற்றொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் திறன் உடையது. முறையான விமான ஓடுபாதை இல்லாத இடத்தில் கூட இந்த விமானத்தை தரையிறக்க முடியும்.

கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச்செல்ல இது சிறப்பான போா் விமானம் ஆகும். இதே போல பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளிலும் இந்த விமானம் பயன்படுத்தக்கூடியது.

இந்த பிரான்ஸ் விமானப்படை போா் விமானம் கடந்த 16ஆம் தேதி பிற்பகலில் சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி சென்றது. இந்த நிலையில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்பிய பின் மாலை 5.00 மணியளவில், அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றது.

இந்த தகவலை சென்னை விமானநிலைய அலுவலர்கள் ட்விட்டரில் இன்று மாலை பதிவிட்டுள்ளனா்.

இதையும் படிங்க:கோபிசெட்டிபாளையத்தில் முதல் போக நெல் அறுவடைப்பணிகள் தீவிரம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details